நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பகுதிகளிலிருந்து தனியார் கம்பெனி மூலம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 48 பேர் மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போதிய உணவு, ஊதியம் வழங்காத நிலையில், அங்கிருப்பவர்கள் அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாட்ஸ்அப் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளனர். தங்களை உயிருடன் மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.