Sankarankovil Temple Festival | திருவிழா ஊர்வலத்தில் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு

திருவிழா ஊர்வலத்தில் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு

சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரியில், கோவில் திருவிழாவிற்காக மேளதாளங்களுடன் தீர்த்தக் குடம் மற்றும் பால்குடம் எடுத்துச் சென்றபோது இரண்டு சமூகத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஒரு சமூகத்தினர் மேளதாளங்கள் முழங்க மற்றொரு சமூகத்தினர் வாழும் தெருவின் வழியாக ஊர்வலமாக சென்ற போது, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.​ இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து சமாதானம் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com