Sankagiri Car Accident | நேருக்கு நேர் மோதிய மினிலாரி - கார்..ஒருவர் பலி

Sankagiri Car Accident | நேருக்கு நேர் மோதிய மினிலாரி - கார்..ஒருவர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, காரும் மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியை முதலில் பார்க்கலாம்.... Breath... ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்பவர், காரில் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. நாரப்பன்சாவடி பகுதியில், கெயில் நிறுவனத்தின் குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சாலையில் ஒருவழிப் பாதையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிரே வந்த மினிலாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டிச் சென்ற ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவியின் மனைவி, மகன் மற்றும் மருமகளை போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com