தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - 6 வழக்குகள் பதிவு

x

சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக போலீசார் மொத்தம் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போராட்டம், அரசு பேருந்தை சேதப்படுத்தியது, காவலர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட 889 நபர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்தை சேதப்படுத்தியதாக ஓட்டுநர்கள் அளித்த புகாரில் 2 வழக்குகள், 6 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை தாக்கியது தொடர்பாக இரண்டு வழக்குகளும், பெண் காவலரின் கையை கடித்ததாக வளர்மதி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்