``குப்பைகளை அகற்ற பணம் கேட்கும் தூய்மை பணியாளர்கள்'' - பெண் பரபரப்பு புகார்

x

நாமக்கல்லில் குப்பைகளை எடுக்க பணம் கேட்டு தூய்மைப் பணியாளர்கள் தொந்தவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. மோகனூர் சாலையில் தனலட்சுமி என்பவர் நடத்தி வரும் சலூன் மற்றும் உடற்பயிற்சி நிலையத்தின் குப்பைகளை அகற்ற, தூய்மைப் பணியாளர்களான ராஜேஷ், ஜெகதீஷ், மற்றும் ஓட்டுநர் சஞ்சய் ஆகியோர், ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் குப்பைகளை அங்கேயே வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்து, அவர்கள் கண்டித்த பிறகும் தூய்மைப் பணியாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் தனலெட்சுமி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்