சங்கிலிச்சாமி - சீலக்காரியம்மன் - மதுரையில் கோலாகலம்

x

உசிலம்பட்டி அருகே அமைக்கப்பட்ட சங்கிலிச்சாமி - சீலக்காரியம்மன் கற்கோவிலில் கும்பாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எஸ். போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த சிறிய கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன், 51 அடி கோபுரத்துடன் கற்கோவில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேகம் என கோலாகலமாக நடந்த இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்