மணல் கடத்தலை தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்

மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது கிராம நிர்வாக அலுவலர் அனேஸ்குமாரை மணல் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்
மணல் கடத்தலை தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்
Published on
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் - ஆம்பூர் சாலையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அனேஸ்குமார் அப்பகுதியில் மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவரை டிராக்டரில் வந்தவர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு மாதனூர் என்னும் இடத்தில் இறக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் அனேஸ்குமார் அளித்த புகாரை அடுத்து தப்பியோடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com