

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. வரகூர் பேட்டை ஊராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஊராட்சிமன்ற தலைவர் பால அறவாழி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள், கூடி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். கொண்டாட்டத்தின்போது No CAA,NRC என்று இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வண்ணக் கோலங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.