சமந்தாவை பிரிந்தது ஏன்? - காரணத்தை முதல்முறை போட்டுடைத்த நாக சைதன்யா
நடிகை சமந்தாவை பிரிந்தது குறித்து நடிகர் நாக சைதன்யா மனம் திறந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு நடிகை ஷோபிதா துலிபாலாவை(Shobita Dhulipala) கரம் பிடித்தார் நாக சைதன்யா. இந்நிலையில் சொந்த காரணங்களுக்காகவே தானும் சமந்தாவும் பிரிந்ததாகவும், ஆனால் ஏன் தன்னை கிரிமினல் போல நடத்துகிறீர்கள் எனவும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நாகசைதன்யா பேசியுள்ளார். மேலும் ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் தான் ஆயிரம் முறை யோசிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story
