பாலியல் தொந்தரவு புகாரில் ஆசிரியர் கைது - ஆசிரியரை விடுவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் இது பொய் வழக்கு என்று கூறியுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com