குடிநீர் கட்டணம் செலுத்தாத போக்குவரத்து பணிமனை : குடிநீர் குழாயை துண்டிக்க மாநகராட்சி நடவடிக்கை

முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்குவதாக ஒப்புக்கொண்டதால் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி கைவிடப்பட்டது.
குடிநீர் கட்டணம் செலுத்தாத போக்குவரத்து பணிமனை : குடிநீர் குழாயை துண்டிக்க மாநகராட்சி நடவடிக்கை
Published on
சேலம் அரசு போக்குவரத்து கழகத்தின் எருமாபாளையம் பணிமனை பல ஆண்டுகளாக சுமார் 40 லட்சம் ரூபாய் அளவிற்கு சேலம் மாநகராட்சிக்கு சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்ட பணிமனைக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை துண்டிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி கைவிடப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com