Salem |நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட இளைஞர்கள்..நடுங்க வைக்கும் வீடியோ

x

கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு - நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் சண்டை. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் நடு ரோட்டில் பட்டாக்கத்தியுடன் சண்டையிடும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பள்ளக்காடு, மோட்டூர் கிராமத்தில் இளைஞர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று, பின்னர் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மணிகண்டன் என்பவரிடம் எதிர்தரப்பை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிவண்ணன், தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் அச்சமடைந்தனர். சம்பவம் தொடர்பாக மணிவண்ணன் மற்றும் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்