வேலை நேரத்தில் ரீல்ஸ் செய்யும் ரேஷன் கடை ஊழியர் - வைரலாகும் வீடியோ
சேலத்தில் பணியின் போது செல்போனில் மூழ்கும் ரேஷன் கடை பெண் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நியாய விலைக் கடையில் சமதர்மம் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சமதர்மம் பணியில் இருக்கும் போது செல்போனில் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்கும் ரேஷன் கடை ஊழியர் சமதர்மம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது
Next Story
