`பூட்டர்' விவகாரம்... பெரியார் பல்கலை. தொழிலாளர் சங்க நிர்வாகியிடம் விசாரணை

x

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க கௌரவ தலைவர் இளங்கோவன், சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விதிகளை மீறி பூட்டர் என்ற அமைப்பை ஏற்படுத்தியது தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தினர் சார்பில் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு இளங்கோவன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜரானார். 2 மணி நேர விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் நல்ல முறையில் விசாரணை முடியும் என்று நம்புவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்