Salem | இதுதான் `சொந்த செலவில் சூனியம்' - விளம்பரம் செய்து சிக்கிய டாக்டர்

Salem | இதுதான் `சொந்த செலவில் சூனியம்' - விளம்பரம் செய்து சிக்கிய டாக்டர்

Salem | இதுதான் `சொந்த செலவில் சூனியம்' - "பெண் குழந்தை-னா ரூ.2000 ஸ்பெஷல் ஆஃபர்.." - விளம்பரம் செய்து சிக்கிய டாக்டர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனப் பார்த்து, பெண் குழந்தை என்றால் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தள்ளுபடி என அதிர்ச்சி சலுகை அறிவித்த பெண் மருத்துவர் கைதாகி உள்ளார்.. வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கருவின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் செய்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நந்தினி தலைமையிலான அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மூலம் நடத்திய அதிரடி சோதனையில் மருத்துவர் செல்வம்பா என்பவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.... இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், அங்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்... ஏற்கெனவே இதே குற்றத்திற்காக மருத்துவர் செல்வம்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது......

X

Thanthi TV
www.thanthitv.com