விஷமாகும் திருமணிமுத்தாறு..? அவலநிலையில் சேலத்தின் உயிர்நாடி... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

x

சேலத்தின் சிறப்பு வாய்ந்த திருமணிமுத்தாறு சாயக்கழிவுகள் ஓடும் ஆறாக மாறிய அவலம்...

ஏற்காடு அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு 120 கி.மீட்டர் பயணம் செய்து கரூர் வழியாக காவிரியில் கலக்கிறது

திருமணிமுத்தாறு - சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பாசன வசதி பெற்று வந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்

திருமணிமுத்தாற்றில் வரும் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல்..

திருமணிமுத்தாறு ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை....

நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிணற்றிலிருந்து பயன்படுத்தும் தண்ணீரால் கால்நடைகள் நோய்வாய் பட்டு இறக்கும் நிலை...

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கி செல்லும் அவலம்...

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே இடத்தில் சாயப்பட்டறைகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சேலம் மாநகரில் அதிகளவில் இயக்கப்பட்டு வரும் சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களை நேரடியாக திருமணிமுத்தாற்றில் திறந்து விடும் நிலை..

தற்போது திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுத்தாலும் ரசாயன தன்மை நீங்குவதற்கு 40 ஆண்டுகள் ஆகும் என்று விவசாயிகள் தகவல்....

திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை..


Next Story

மேலும் செய்திகள்