ஆள் தெரியாமல் துரத்திய ஊர் மக்கள் - பயத்தில் அப்பாவி மரணம்

x

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே திருடர்கள் என கிராம மக்கள் துரத்தியதால், வழி தவறி ஓடிய இளைஞர், கல் குவாரியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஓமலூரில் உள்ள நாரணம்பாளையத்தில் நடைபெற்ற திருவிழாவுக்கு நல்லம்பள்ளியைச் சேர்ந்த 3 பேர் வந்திருந்தனர். அவர்கள், சின்ன அடைக்கனூரில் இரவில் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி விரட்டியுள்ளனர். அங்கிருந்த ஓடிய விஜய் என்பவர், காலையில் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் தேடியபோது, அங்குள்ள கல் குவாரியில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்