சேலத்தில் தினத்தந்தி- முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி..ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு

சேலத்தில் தினத்தந்தி- முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி..ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
Published on

தினத்தந்தி நிறுவனம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.

கடந்த 22 ஆண்டுகளாக தினத்தந்தி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தான்டு, தினத்தந்தி நிறுவனம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. தினத்தந்தி நிறுவனத்தின் ப்ரமோசன்ஸ் தலைமை பொதுமேலாளர் தனஞ்செயன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com