"குடும்பத்தில் ஒரு உயிர் பலி" - துரத்திய அமானுஷ்யம்.. நடுங்கிய தொழிலதிபர்.. கடைசியில் ட்விஸ்ட்

வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பளையம் பகுதியை சேர்ந்தவர், விமலா. சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வரும் இவர், தொழில் நஷ்டத்தில் இருந்து மீள, ஒரு பூஜை போடலாம் என முடிவெடுத்தார். இதற்காக, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த மாந்த்ரீகவாதியான சுரேஷ்குமார் வரவழைக்கப்பட்டுள்ளார். வந்த அவர், பல்வேறு பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றும், அவற்றை செய்யாவிட்டால் உங்கள் குடும்பத்தில் உயிர்பலி ஏற்பட்டு விடும் என்றும் விமலாவை பயமுறுத்தியுள்ளார். மேலும், இந்த பரிகாரங்களுக்காக விமலாவிடம், சுமார் 7 லட்சம் வரை பணமும் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில், மாந்திரீகவாதி சுரேஷ் குமாரின் நாடகம் அம்பலமானதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், சுரேஷ்குமார் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com