சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர், கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு ஐய்யம்பெருமாள் பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது பெண் மருத்துவர் ஒருவரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விபத்துக்கு காரணமான மருத்துவர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட மணிகண்டன், அவரது மனைவி தேன்மொழி உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைக்குழந்தையுடன் வந்திருந்த தேன் மொழி, திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரபப்பு ஏற்பட்டது.