அரசு விழாவில் பெரும் பரபரப்பு - கத்த கத்த தூக்கி வெளியேற்றிய போலீஸ்
சேலத்தில் அரசு விழாவில் மனு அளிக்க வந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வெளியேற்றினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மானத்தாள் ஊராட்சியை சேர்ந்த சசிக்குமார் என்பவரது தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டி மின் வாரியத்திடம் பலமுறை விண்ணப்பித்தும் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மானத்தாள் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த ஆட்சியரிடம் மனு கொடுக்க சசிக்குமார் முயன்றுள்ளார். அதிகாரிகள் தடுத்ததால் வாக்குவாதம் செய்த அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
Next Story