பைக்கையே இழுத்து செல்லும் வெள்ளம்.. பயந்து நிற்கும் மக்கள் "இந்த மழைக்கே இப்படியா?"

பைக்கையே இழுத்து செல்லும் வெள்ளம்.. பயந்து நிற்கும் மக்கள் "இந்த மழைக்கே இப்படியா?"
Published on
• சேலத்தில் மழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியே தண்ணீரால் வாகன ஒட்டி தடுமாறி கீழே விழுந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அரங்கேறியது. கிச்சிபாளையம் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் சென்றதால், ஆட்களை இழுத்துச் செல்லுன் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவசர தேவைக்கு சாலையை கடப்பவர்களுக்கு உள்ளூர் இளைஞர்கள் உதவி செய்தனர். இந்த பிரச்சனைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com