பெண்ணை கன்னத்தில், அறைந்த காவல் ஆய்வாளர் - அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணை கன்னத்தில், அறைந்த காவல் ஆய்வாளர் - அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
Published on

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சூர்யா என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து, கொலையாளிகளை கைதுசெய்யக் கோரி, சேலம் அரசு மருத்துவமனை முன்பு, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை வலுக்கட்டயமாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் குமார், பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com