ஆன்லைனில் பீட்சா.. திறந்து பார்த்த கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தனியார் உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் துர்நாற்றம் வீசியதால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நரசிங்கபுரத்தில் கிழக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் மணி. ஆன்லைன் மூலம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், பிட்சா ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட உணவை பிரித்து சாப்பிட முயன்றபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com