கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி - விளையாட்டு போட்டிகளில் அசத்திய மாணவ, மாணவிகள்

சேலத்தில் முதன்முறையாக மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி - விளையாட்டு போட்டிகளில் அசத்திய மாணவ, மாணவிகள்
Published on

சேலம் காந்தி மைதானத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் ஓவியப்போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி, என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக மாணவ, மாணவிகள் சினிமா பாடலுக்கும், கிராமிய பாடலுக்கு ஆடிய நடனம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. நைஜிரியாவை சேர்ந்த ஒரு மாணவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டார். இது போன்ற போட்டிகள் நைஜிரியாவில் நடத்தப்படுவதில்லை என அந்த மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com