இறப்பில் சந்தேகம் - 7 நாள் கழித்து பிரேத பரிசோதனை | Salem | Postmordem

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி இறப்பில் சந்தேகம் எழுந்ததால் அடக்கம் செய்யப்பட்ட ஏழு நாட்களுக்கு பிறகு அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பண்ணப்பட்டி, மாரகவுண்டன் புதூரை சேர்ந்த 62 வயதான விவசாயி பாலு, கடந்த 31-ம் தேதி வீட்டருகே சாலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நடந்த இரண்டு நாள் கழித்து, டிராக்டர் மோதி பாலு இறந்ததாக அவரது மகன் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்