சேலம் மாநகர பகுதியில் பணியாற்றும் காவலர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முக கவசத்தை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் வழங்கினார். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பாடலையும் அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ஆயிரத்து 665 வார்த்தைகளை கொண்டு புதுமையாகத் தெரியும் நன்றி என்ற வார்த்தையை உருவாக்கி காவல்துறையினரிடம் வழங்கினார்.