சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கணவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
Published on

கொளத்தூர் பகுதியை சேர்ந்த தீபக், அவரின் அத்தை மகளான வேதவள்ளியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 4 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வேதவள்ளி கணவன் தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலறல் சப்தம் கேட்க பெற்றோர் சென்று பார்த்த போது, வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டதை பார்த்தனர். இதனையடுத்து, உயிருக்கு போராடிய வேதவள்ளி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி தீக்குளித்த செய்தியறிந்த கணவர் தீபக், எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேதவள்ளி சிறுநீரக கற்களால் ஏற்பட்ட வலி காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com