கூட்ட நெரிசலுடன் தினசரி காய்கறிசந்தை - காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வரும் நிலையில் அங்குள்ள வியாபாரிகள் யாரும் சமூக விலகல், மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்ட நெரிசலுடன் தினசரி காய்கறிசந்தை - காற்றில் பறந்த தனிமனித இடைவெளி
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வரும் நிலையில் அங்குள்ள வியாபாரிகள் யாரும் சமூக விலகல், மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விதிகளை மீறி ஏராளமான நடைபாதை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதால், அப்பகுதியே எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓமலூர் பேரூராட்சியில் செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக உள்ளதால், நகர் பகுதியில் கட்டுபாடுகள் இல்லாமல் அனைத்து கடை உரிமையாளர்களும், வியாபாரிகளும் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com