Salem | Love Marriage | கலவரத்தில் முடிந்த காதல் திருமணம் - ரத்த வெள்ளத்தில் உறவினர்கள்

கலவரத்தில் முடிந்த காதல் திருமணம் - ரத்த வெள்ளத்தில் உறவினர்கள்

கலவரத்தில் முடிந்த காதல் திருமணம் - மாப்பிள்ளை உள்பட 4 பேர் கைது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பனம்பட்டியில் காதல் திருமணம் செய்ததால் 2 குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மனோஜ் என்பவர் அதேபகுதியை சேர்ந்த இளந்தென்றல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்... இதற்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்து, கத்தி, கம்பி, கிரிக்கெட் பேட்டைக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் மாப்பிள்ளை மனோஜ், அவரது அண்ணன் மணிகண்டன், வழக்கறிஞர் தசரதன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com