Salem Incident | கவுன்சிலரின் கணவர் தாக்குதல்? | அழுதுகொண்டே சென்ற பெண் அதிகாரி
சேலம் மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை, தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தாக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சுமதி என்பவரை, 45-வது வார்டு கவுன்சிலர் சுஹாசினி என்பவரின் கணவர் செந்தில், காலை உணவு திட்டத்திற்காக கட்டி முடிக்கப்பட்ட சமையல் அறையின் சாவியை கேட்டுள்ளார். அப்போது, பணிகள் முடிந்தபின் மேல் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாவியை கொடுப்பதாக சுமதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், சுமதியை தாக்க முயன்றதாகவும், அப்போது, அங்கிருந்த கவுன்சிலர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உதவி செயற்பொறியாளர் சுமதி, அழுதுகொண்டே சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் புகார் அளித்த நிலையில், ஆணையாளர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
