Salem Hospital | Rats | ஹாஸ்பிடலில் எலிகள் கூட்டம் கூட்டமாக உலா.. நோயாளிகள் அதிர்ச்சி

x

அரசு மருத்துவமனையில் உலாவும் எலிகளால் நோயாளிகள் அவதி சேலம் அரசு மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை பிரிவில் உலாவும் எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள மரப்பகுதிகளில் வெளியேறும் எலிகள், மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் உலாவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எலிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனே எலிகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்