சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் செங்கோடனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் பலகையில் மாணவன் சரியாக எழுதவில்லை என கூறி ஆங்கில ஆசிரியர் வெங்கடேஷ் மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.