தீபாவளி விருந்திற்கு கோழி திருடிய சிறுவர்கள்..மடக்கி பிடித்த வளர்ப்பு நாய் - வெளியான ஸ்வாரசிய காட்சி

சேலம் அருகே தீபாவளியை கொண்டாட கோழி திருடிய சிறுவர்களை வளர்ப்பு நாய் சுற்றி வளைத்துள்ளது. ராமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர், தனது விவசாயத் தோட்டத்தில், கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி செலவு மற்றும் விருந்திற்காக 4 சிறுவர்கள், மதியழகன் பண்ணையில் கோழிகளை திருடியுள்ளனர். இதனை, அறிந்த அங்கிருந்த வளர்ப்பு நாய், சிறுவர்களை சுற்று வளைத்துள்ளது. பின்னர், சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com