Salem Factory Issue | திடீர் வாந்தி, மயக்கம் - சாயப்பட்டறையில் இருந்து வெளிவந்த கொடூர ஆசிட்
#Salem #Factory #FactoryIssue #Acid #ThanthiTV Salem Factory Issue | திடீர் மூச்சுத்திணறல்.. வாந்தி, மயக்கம் - பதறிப்போன பொதுமக்கள்.. சாயப்பட்டறையில் இருந்து வெளிவந்த கொடூர ஆசிட் சேலம் மாநகரின் முள்ளுவாடி மேற்கு தெருவில் தனியார் சாயப்பட்டறை இயங்கி வந்தது. இந்நிலையில், சாயப்பட்டறையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டு திடீரென அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிட் கசிவு குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் அடித்து வாயுக் கசிவை சரிசெய்தனர். இதன் பின்னர் அன்னதானப்பட்டி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த சாயப்பட்டறைக்கு இன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலைக்கு சீல் வைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
