புதிய கிளைகளை துவக்குகிறது சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் | Chennai

தமிழகத்தில் 22 கிளைகள் உட்பட நாடு முழுவதும் 300 கிளைகளை துவங்க, சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஐசிஎல் பின் கப் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில், நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கே.ஜி.அனில் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை ஐசிஎல் பின் கார்ப் கையகப்படுத்திய பின்னர், ஒரு ரூபாய் மதிப்பில் இருந்த சேலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு தற்போது 122 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார். தங்க நகைக் கடன் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்கி வருவதால், நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்திருப்பதாகவும், இதே சேவை அனைத்து கிளைகளுக்கும் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com