Salem | தூங்கிக்கொண்டிருக்கும் போது திமுக பிரமுகர் வெட்டிக்கொ*ல..சரணடைந்தவர் சொன்ன பகீர் பின்னணி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே திமுக பிரமுகர் மாணிக்கம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜ்குமார் என்பவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த வீரகனூர் போலீசார், ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், புளியங்குறிச்சியைச் சேர்ந்த ராஜ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முதற்கட்ட விசாரணையில், நீண்டகால நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது . மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com