கொடநாடு விவகாரம் : "பிரேத பரிசோதனையில் கனகராஜ் போதையில் இருந்தது உறுதி - சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மரணத்திற்கு சாலை விபத்து மட்டுமே காரணம் என சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மரணத்திற்கு சாலை விபத்து மட்டுமே காரணம் என சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து நிகழ்ந்த போது கனகராஜ் குடிபோதையில் இருந்ததாகவும், போக்குவரத்து விதிகளை மீறி வலதுபுறமாக செல்லும் போது, எதிரே வந்த கார் அவர் மீது மோதியதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com