ஓமலுரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள கிராம பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ரோகினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராமபுறங்களில் தெருவிளக்கு, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை அறிந்த அவர், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் முருகன், கணவாய்ப்புதுர் ஊராட்சி செயலாளர் அமரவேல், பண்ணப்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெயவேல் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவிற்கு பொதுமக்கள் பாராட்டுடன் நன்றி தெரிவித்து வரும் நிலையில், இது போன்று மற்ற கிராமங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.