எஸ் டிரேஸ் செயலியை அறிமுகப்படுத்திய ஆட்சியர் - தேவையின்றி சுற்றுபவர்களை அடையாளம் காண செயலி

சேலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எளிதில் அடையாளம் காண எஸ் டிரேஸ் எனப்படும் செயலியை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
எஸ் டிரேஸ் செயலியை அறிமுகப்படுத்திய ஆட்சியர் - தேவையின்றி சுற்றுபவர்களை அடையாளம் காண செயலி
Published on
சேலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எளிதில் அடையாளம் காண எஸ் டிரேஸ் எனப்படும் செயலியை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியை காவல் துறையினர் செல்போனில் பதிவேற்றம் செய்து, வெளியில் வருபவர்களின் புகைப்படம் எடுத்து, அவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்கின்றனர். தடை உத்தரவை மீறி இரண்டாவது முறையாக அந்த நபர் வெளியில் வந்தால், எஸ் டிரேஸ் செயலி மூலம் மீண்டும் புகைப்படம் எடுக்கும் போது அந்த நபரை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் மக்கள் வெளியில் வருவதை கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com