"படிப்போட Value இப்போ தான் தெரியுது".. விட்டதையெல்லாம் ஆடிப்பாடி ஒரே நாளில் பிடித்த பெண்கள் | Salem
சேலத்தில் நடத்தப்பட்ட ஒரு நாள் கல்லூரி மாணவி நிகழ்ச்சி, அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் "ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை" என்ற தலைப்பில், 30 வயது முதல் 60 வயதுடைய மகளிர், தங்களின் வயதை மறந்து நடனமாடியபடி கல்லூரி பேருந்தில் பயணித்தனர். நாள் தோறும் தங்களின் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்புவோர், அவர்களே கல்லூரி மாணவியராக செல்லும்போது, சிறகே இல்லாமல் பறக்கும் பறவை போன்றே காட்சியளித்தனர். குடும்ப சூழ்நிலை காரணமாக மேல் படிப்பு படிக்க முடியவில்லை என்றும், கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு, இன்று நிறைவேறி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
