Salem | Child Kidnapping | இரண்டாவது மனைவிக்காக குழந்தையை கடத்திய நபர் கைது

x

சேலத்தில், உடல்நிலை சரியில்லாத இரண்டாவது மனைவிக்காக குழந்தையை கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தை சேர்ந்த மதுரை என்பவர் தனது மனைவி மற்றும் 9 மாத குழந்தையுடன் சாலையோரம் தங்கி கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மதுரையின் பெண் குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். தகவலறிந்த போலீசார், 200 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். மேலும் விசாரணையில், தனது இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கடத்தியதாக ரமேஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்