

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை, நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைகால சிறப்பு அமர்வில் இன்று, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 8 வழி சாலைத் திட்டம் குறித்து மத்திய மாநில அரசுகளின் முடிவுகள் இருக்கும் என்பதால் வழக்கு விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.