சேலம் அருகே வாகனம் கவிழ்ந்து 40 பேர் படுகாயம் - விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதி

சேலம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் அருகே வாகனம் கவிழ்ந்து 40 பேர் படுகாயம் - விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதி
Published on

சேலம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த 40 பேர் தங்கள் உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர். அப்போது வேப்பநத்தம் அருகே வாகனம் வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு நேரத்தில் விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும், 40 பேர் வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com