தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து - விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

சேலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து - விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
Published on

சேலம் சிவதாபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று 80 பயணிகளுடன் வேம்படிதாளத்தில் இருந்து சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கந்தம்பட்டி பாலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென டீசல் டேங்க் வழியாக செல்லும் வயர் துண்டிக்கப்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதில் பேருந்து முழுவதும் தீ பரவியதால் உள்ளே இருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீக்கிரையான நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com