தலையில் கதத்தால் அடித்து கயிற்றை வீசி ஹெல்மெட் போடாதவரின் உயிரை எடுத்த எமதர்மராஜா

x

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர். கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழப்பதை போன்றும், அங்கு காத்திருந்த எமதர்மராஜா கயிறை போட்டு உயிரைப் பறிக்கும் விதமாக தத்ரூபமாக நடித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர் மீது எமதர்மராஜா கயிறைப் போட்டு வீசியும், கதத்தால் தலையில் அடித்து, ஹெல்மெட் அணியாமல் சென்றால் அங்கு நான் வந்து உன் உயிரை பறிப்பேன் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்