Salem | Attur | தனியாக தவித்த குழந்தைக்கு மருத்துவமனை பணியாளர் செய்த நெஞ்சை பிழியும் செயல்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, எதிர்த் திசையில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில், குடும்பத்துடன் காரில் சென்ற பெண்ணும், அவருடைய 3 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடி விட்டு, பெருந்துறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பாளையம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வேகமாக வந்த சொகுசு கார், சாலைத் தடுப்பில் மோதி, சுரேஷின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுரேஷின் மனைவி ஜெயப்பிரியா, 3 வயது மகன் தஸ்வின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த சுரேஷ், தன் மனைவி இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷின் மகளான 11 மாத குழந்தை தர்ஷினி உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவமனை பணியாளர் பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
