Salem | Accident | லாரி மீது மோதிய வேகத்தில் சுக்குநூறாக சிதைந்த சொகுசு பேருந்து

x

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, வாழப்பாடி அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி சுமார் 33 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பேருந்து மோதியது. இதில் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து ஓட்டுநர் ராஜீவ் காந்தி என்கிற படையப்பா, இருக்கையில் அமர்ந்தவாறே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், சுமார் மூன்று மணிநேரத்திற்குப்பின் அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்