இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 13 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி

சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 13 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 13 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
Published on

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி துரைசாமி. இவர் தனது 3 வயது மகள் தாரணியை அழைத்துக்கொண்டு, வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள உறவினர் ராஜேந்திரன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கிருந்து, வேப்பிலைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது, வழி காண்பிக்க ராஜேந்திரன் மகள் சௌமியாவை உடன் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது எதிரே 4 பேருடன் வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக துரைசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சௌமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் துரைசாமி, அவரின் 3 வயது மகள் தாரணி, மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுரேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்ற ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் வீட்டுக்கு வழி காண்பிப்பதற்காக சென்ற பள்ளி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com