

தருமபுரி மாவட்டம் வரதகவண்டனூர் பகுதியைச் சேர்ந்த, மணிராஜ் என்பவர், உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜோடுகுளி என்ற இடத்தில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையம் கொண்டு வந்தனர். கணவன் இறந்த செய்தி கேட்டு, காவல்நிலையம் வந்த மனைவி, ஆம்புலன்சில் பிணமாக கிடந்த தனது கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை பிடித்து ஆறுதல் கூறினர். காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு ஆண்டிற்குள்ளேயே, கணவர் விபத்தில் இறந்ததை மனைவி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.